Search This Blog

Friday, October 1, 2010

கண்டிப்பாக பார்க்கக்கூடாத படம்


நேற்று இரவு கே டிவி அலைவரிசையில் "எவனோ ஒருவன்" திரைப்படம் ஓடிக்கொண்டிருந்து. எந்த சேனலை மாற்றினாலும் வேறு நல்ல நிகழ்ச்சிகள் இல்லாத காரணத்தால்  (என்னிக்கு இருந்துச்சு  ??) அந்தப்படதையே பார்க்க வேண்டியதாயிற்று.
முன்னரே பார்த்தப்படம்தான் என்றாலும் வேறு வழியின்றி அதை பார்த்தேன்.

என்னைப்போல் ஒரு சாதாரணமானவன் இந்த சமுதாயத்தை பார்த்துப்படுகின்ற கோபமே இப்படம்.
இது " Dombivli Fast " என்ற மராட்டி படத்தின்  மறுஆக்கம். தமிழிலும் இயக்கியிருப்பவர் நிஷிகாந்த் காமத் (Nishikanth Kamat ).வசனம் நம் மாதவன். நம்மால் சரியாக அங்கீகரிக்கப்படாத அல்லது அங்கீகரிக்க முடியாத சிறந்தப்படங்களில் ஒன்று.

2007 -ல்  வெளிவந்த இப்படத்தை மூத்தப்பதிவர்கள் பலர் பல்வேறு கோணங்களில் எழுதியிருக்கலாம்..  இது  என் உணர்வுகளின் பகிர்வு.

ஒரு சாதாரண மனிதனின் கதை இது. ஒரு அளவான குடுமபத்தின் தலைவன் ஸ்ரீதர் வாசுதேவன. அவன் மனைவி வத்சலா மற்றும் அவன் இரு குழந்தைகள். சாதாரண நடுத்தர வர்க்கம். அவன் செய்யும் ஒரே தவறு அவன் நேர்மை. நாம் என்ன இதிகாச காலத்திலேய  வாழ்கின்றோம் எல்லோரும் நல்லவர்களாக  இருப்பதற்கு??...
நடைமுறை தெரியாத முட்டாள்.அவனின் நேர்மை எல்லோருக்கும் பிரச்சினையாய் இருக்கிறது.

கடையில் பொருள் வாங்கிவிட்டு கொடுக்கின்றப்பணத்திற்கு  கணக்கு கேட்பது நம்  சாதாரண உரிமை. அதற்காக அவன் நடத்தப்படும் விதம் புதிதில்லை. அவனின் உரிமையை மறுப்பது எவனோ ஒருவன் அல்ல நம் சக மனிதன்தான், கடைக்காரன்.
அவன் உரிமைக்கான போராட்டம் அவனின் சக மனிதர்களாலேயே அங்கீகரிக்கப்படவில்லை. அதற்கு நீங்களும் நானும் சேர்ந்து கொடுத்தப்பரிசு மரணம்.


இப்படத்தில் குறிப்பிட வேண்டியதில் ஒன்று இதன் வசனம் (நம் மாதவன் ). சிறந்த வசனங்கள்.
இப்படத்தில் வரும் ஒரு வசனம்  சீமான் தன சக காவலரிடம் சொல்வதாக  அமையும்,
"இவன  மாதிரி ஆளுங்களெல்லாம் தப்பு பண்ண ஆரம்பிச்சுட்டா" என்று வரும். இதில் 
மாதவனின் உடல்மொழி( body language )  மிகவும் அருமை. நடுத்தர வர்கத்தின் இயலாமையையும் கோபத்தையையும் அருமையாக பிரதிபலித்திருப்பார்.


நாம் இங்கு உரிமைக்காக ஆயுதம் ஏந்த வேண்டியதில்லை, நம் உரிமையை கேட்ககூடமாட்டேன் என்கின்றோம். உரிமை மறுக்கப்படுவது பிரச்சினையில்லை. இயலாமைதான் இங்கு பிரச்சனை. நம் உரிமையை நாமே ஒத்துக்கொள்ளமாட்டேன்  என்கின்றோம். நாகரீகம் என்பது அமைதியாகச செல்வதில் இல்லை , தங்கள் உரிமையை கேட்பதில்தான்  இருக்கிறது என்பது எத்தனை மனிதனுக்கு தெரியும்.


நாம் எல்லோரும் சாக்கடையிலே வாழப்பழகிவிட்டோம் அதிலேயே அசிங்கம் செய்துகொண்டு... கேட்டால் அரசியல்வாதிகள் சரியில்லை அல்லது அதிகாரிகள் சரியில்லை என்பார்கள். பண்ணும் அசிங்கம் எல்லாம் நீயும் நானும் சேர்ந்து பண்ணுவது.
என்னை இத படத்தை முழுவதுமாக பார்க்க முடியவில்லை.. அது குற்றவுணர்வால இல்லை ஆத்திரமா என்று தெரியவில்லை. 

ஆகவே மக்களே தயவுசெய்து இப்படத்தை பார்காதிர் இல்லை  பார்க்கும் முன் உப்பு காரம் குறைத்து சாப்பிடவும். தப்பித்தவறி மானமும் கோபமும் வந்துவிடப்போகின்றது.











7 comments:

எந்திரன் said...

சரியாக சொன்னிர்கள்

யோகு (அ) யோகநாத் said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தல..

நிகழ்காலத்தில்... said...

//அது குற்றவுணர்வால இல்லை ஆத்திரமா என்று தெரியவில்லை. //

உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

வாழ்த்துகள் பாஸ்..

Unknown said...

எவனோ ஒருவன் சிறந்த தமிழ் படங்களில் ஒன்று. இம்மாதிறியான சிறந்த படங்களை நம் மக்கள் ஏனோ வரவேற்பதில்லை. ஆனால் தொலைக்காட்சியில் கண்டவர்களுக்க இப்படத்தின் தாக்கம் இருந்துகொண்டே இருக்கும். நீங்கள் மேற்சொன்ன கருத்துக்கள் அத்தனையும் நிஜம். //ஆகவே மக்களே தயவுசெய்து இப்படத்தை பார்காதிர் இல்லை பார்க்கும் முன் உப்பு காரம் குறைத்து சாப்பிடவும். தப்பித்தவறி மானமும் கோபமும் வந்துவிடப்போகின்றது.//

வவ்வால் said...

"Falling down " film paarkavum nishikanth kamath meethum kovam varum?!!

யோகு (அ) யோகநாத் said...

ஆமா தல , கலைஞர் டிவில சமீபத்தில பாத்தேன். பாத்தவுடனே புரிஞ்சுபோச்சு இதுல இருந்துதான் சுட்டுருக்காங்க :(. பரவயில்ல தல ஆனா நம்ம மாதவன் சுட்ட படத்துக்கே ஸ்க்ரீன் ப்ளே எழுதியிருக்கேன் சொல்லியிருந்தாரு. "நா இப்ப என்ன செய்ய ?? "

bandhu said...

ஒரு மனிதனின் தார்மீக கோபம் மிக அழகாக இந்த படத்தில் காட்டியிருப்பார்கள். என்னை பொறுத்தவரையில் இந்த படத்திற்கும் Falling Down -க்கும் ஏகப்பட்ட வித்த்யாசங்கள். அந்த படத்தின் அடி இழை விவாகரத்தால் தன் குடும்பம் சிதையும்போது அதை எதிர்கொள்ள முடியாதவனின் கோபம். இதில் சமூகத்தில் புரையோடியிருக்கும் அழுக்குகள் தன்னை பாதிக்கும்போது , எதிர்க்க முடியாமல் வரும் கோபம்.

ஒரு நல்ல படம். ஓடியிருக்க வேண்டியது. நாம் எங்கே நல்ல படங்களை ஓட விடுகிறோம்!

Post a Comment