கொஞ்சம் இடைவெளி, மன்னிக்கவும்,
எனக்கு கொஞ்சம் வயசு ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன். சில விசயங்கள பார்க்கும்போதோ கேட்கும்போதோ கொஞ்சமா ரத்த அழுத்தம் அதிகமாகுது... அது என்ன விஷயம் எப்ப அப்படி ஆகுதுன்னு என் நண்பன்கிட்ட சொன்னா, என்னப்பாத்து ரொம்ப கேவலமா சிரிக்கிறான்.
உங்ககிடேயும் சொல்லுறேன் நீங்களே சொல்லுங்க எனக்கு வயசு ஆகிடுச்ச இல்ல நான் இன்னும் வளருனுமான்னு??
இப்ப வருகின்ற விளம்பரங்கள் ரொம்ப சக்திமிகுந்ததாக இருக்கிறது. ஒரு சில நொடிகளில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிறந்த கற்பனைத்திறன் மிகுந்த விளம்பரங்கள் பல. விளம்பரங்கள் பொதுவாக எந்த முன்னறிவுப்பும் இல்லாமல் வீட்டின் முன்னறை வரை ஆரம்பித்து பலகாலமாகிவிட்டது. தாத்தா பாட்டியிலிருந்து பேரன் வரைக்கும் எல்லோருக்கும் தொலைகாட்சி என்பது இரண்டாவது உலகம். எந்த குழந்தையும் பாட்டியிடம் கதைகேட்க விரும்புவதில்லை எந்த பாட்டிக்கும் அதற்க்கு நேரம் இல்லை. குழந்தையின் உலகம் cartoon network -லும் பாட்டியின் உலகம் தெற்கத்தி பெண்ணிலும் ஒன்றிபோய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பெரும்பாலும் குழந்தைக்கான அளவுகோல் வயது குறைந்துகொண்டே வருகிறது. நான் ஆறாவது படிக்கும் வரையில் சாலையை கடந்து பள்ளிக்கு விட்டு வருவார்கள் என் அம்மா.
இன்றோ இரண்டாவது படிக்கும் என் அண்ணன் மகளுக்கு எல்லா தொலைகாட்சி பாடல்களும் பாடத்தெரியும். தொடர்களில் வரும் கதாப்பாத்திரங்கள் முதற்கொண்டு பேசுகிறாள். cartoon network மறந்து வெகுநாட்களாகிவிட்டது.
சமீபகாலமாக வரும் சில விளம்பரங்கள் எதிர்மறை தாக்கத்தையே எனக்கு ஏற்படுத்துகிறது.
சிலநாட்கள் வரை சில படங்கள் சில திரையரங்குகளில் 11 காட்சியாக மட்டுமே ஓடிகொண்டிருந்து.அவற்றின் விளம்பரங்களில் கூட அதற்கான தணிக்கை சான்றிதல் மற்றும் வயது வரம்பு குறிப்பிடப்பட்டிருக்கும். தேவையானவர்கள் தங்கள் தேவைக்காக சென்றுவரும் இடமாக இருந்தது. இப்போது அதற்கான அவசியம் இல்லாமலே போய்விட்டது.எல்லாவற்றையும் MMS களும் Internet -மே கவனித்துகொள்கிறது என்று சாக்கு சொல்லலாம், விபச்சாரம் பழமையான தொழில்தான் அதற்காக யாரும் வீட்டிற்க்குள் அனுமதிப்பதில்லை.
ஆனால் இப்போது வரும் விளம்பரங்களோ எந்த முன்னறிவுப்பும் இல்லாமலே உங்கள் வீட்டு வரவேற்பு அறை முதல் படுக்கை அறை வரை வருகைத்தருகிறது.
கீழ்க்கண்ட விளம்பரங்கள் சில எடுத்துகாட்டு.(எனக்கு அந்த அசிங்கத்தை என் பக்கத்தில் ஒளிபரப்புவதில் விருப்பமில்லை)
1 . Wild Stone deodorant .
2 . 18 + .
3 . FastTrack bags.
4 . Vivel soap (Dull Divya).
ஒரு காலத்தில் ஆணுறை விளம்பரங்கள் கூட கண்ணியமாக வந்துகொண்டிருந்து. ஆனால் இப்போதோ அடுத்தவன் பொண்டாட்டி அதுவும் அண்ணன் பொண்டாட்டி சாதாரண வாசனை திரவியத்தில் மயங்கி கண்டவனுடன் சோரம் போவதை 5 மணித்துளிக்கு (minutes) ஒருமுறை காட்டிகொண்டிருகிறார்கள் அதுவும் எல்லோரும் பார்க்கும் திரைப்படத்திற்கு இடையிலும் செய்திகளுக்கு நடுவேயும்.
இன்னொரு விளம்பரம், பைக்காக (bags) இதில் ஒன்றில் தன் காதலி இருக்கும்போதே இன்னொருத்தியோடு இருப்பதை காட்டுகிறார்கள். காதலியோ தன் காதலனோடு வரிசையில் நிற்கும்போதே இன்னொருவனுக்கு கண் காண்பிக்கிறாள். மக்களே சாதாரண பைக்கும் இதற்கும் என்னங்க சம்மந்தம்.??
இது பரவயில்லைங்க ஏதோ வேற நாட்டு விளம்பரமாதிரி இருக்கு. இந்த சோப்பு விளம்பரம் ரொம்ப அதிகம். நம்ம திரிஷா முதற்கொண்டு எல்லாரும் ஒரு பொண்ண ஓட்றாங்க. ஏற்கனவே நம்ம ஆளுங்களுக்கு கருப்புன்னா கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை அதிகம்.அதுவுமில்லாம எல்லா கல்லூரியிலும் ராகிங் பிரச்சினை வேறு.
சும்மாவே நம்ம பசங்க ஆடுவாங்க இதுல இவங்க வேற சலங்க கட்டிவிடறாங்க.
என் நண்பன் மருது என்கிட்டே அடிக்கடி சொல்லற ஒரு விஷயம் "மச்சி, கருப்பு என்பது நிறமல்ல அது ஒரு வரம்" நண்பர்களே இதையே நானும் உங்களுக்கு சொல்லுறேன்.
ஆகவே மக்களே இவங்களுக்கு கொஞ்சம் கூட உங்களையும் என்னையும் பற்றி கவலை இல்லை. அவர்கள் பணத்திற்காக விற்பனைக்காக விபச்சாரம் கூட செய்வார்கள் அல்லது ஒளிபரப்புவார்கள், நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? குடும்பத்தோடு கடலை சாப்பிட்டுக்கொண்டு ரசிக்க போகிறிர்களா??
இதைதான் என் நண்பனிடம் சொன்னதற்கு, "நீ ரொம்ப வளரனும் தம்பி " அப்படின்னு சொன்னான். மற்றொருவனோ "உனக்கு வயசாயிடுச்சு டா" அப்படிங்கிறான்.
நீங்களே சொல்லுங்க நான் இப்ப என்ன செய்ய ??
17 comments:
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை. வாழ்த்துக்கள்
இது வேற பதிவுக்கு சொன்ன கதை. இங்கும் பொருந்தும் என்பதாலும், அந்தக் கதை எனக்கே ரொம்ப பிடிச்சிருச்சு என்பதாலும் மீண்டும் இங்கே உங்க பதிவுக்கு...
...ஒரு கதை இருக்கு தெரியுமா, ஓஷோ சொல்லியிருப்பாரு. ஒரு ஊர்ல, இருக்கவன் எல்லாரும் ஒரு குறிப்பிட்ட கிணத்தில இருந்து தண்ணீர் குடிச்சாங்களாம் அவிங்க பூராவும் கிறுக்கனா ஆயிட்டாங்களாம். அந்த ஊரை ஆண்ட ராஜா மாத்திரம் ‘தெளிவா’ இருந்தாராம், அதுனாலே அந்தக் கூட்டத்தோட தப்புத்தாளங்கள் எல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சிச்சாம். இவரு அத சுட்டிக்காட்டியிருக்காரு அவிங்க எல்லாம் சேர்ந்து ‘மெஜாரிடியில்ல’ இவர, ராஜாவை பைத்தியம்னு முடிவு பண்ணி ஆளா இறக்கப் பார்த்திருக்காய்ங்க. சரி, இதுக்கு மேலே சரியா வராதுன்னு அவரும் விவரம் புரிஞ்சி அந்தக் கிணத்து தண்ணிய குடிச்சிட்டு அந்தக் கூட்டத்தோட ஐக்கியமாகிட்டாராம், அது மாதிரிதான் சமத்தா இருக்கணுமோய். சீக்கிரம், தண்ணியக் குடிங்க், தண்ணியக் குடிங்க... :)...
நண்பரே! word verification optionyயை தூக்கிடுங்களேன்... நன்றி!
GOOD ARTICAL
இதைத்தான் "அம்னக்குண்டிகள் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் " என்பார்கள்
தங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி நண்பர்களே. Word Verification option நீக்கியயிர்று திரு தெகா.
எல்லாம் சரி தெகா, எந்த தண்ணின்னு சொல்லவே இல்ல?? ;-)
"இதைத்தான் "அம்னக்குண்டிகள் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் " என்பார்கள் "
இத நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே அப்படின்னு சொல்லலாம் இல்லையா??? :-) :-)
சகோதரர் கக்கு மாணிக்கம் - ரிப்பிட்டேய்
உண்மையிலேயே நாம் எல்லோரும் யோசிக்க வேண்டிய விஷயம். என்னுடைய தமிழ் ஆசிரியர் ஒரு விஷயம் சொன்னார். அதாவது, ஒரு ஆணுறை அல்லது சானிட்டர் நாப்கின் விளம்பரம் வருகிறது, அது கவருவதாக இருக்கிறது, நமக்கு அப்போது 15,16 வயதாகிறது, நமக்கு 8,9 வயதில் தங்கை இருக்கிறாள், இப்போது அந்த தங்கை நம்மிடத்திலோ, அல்லது நம்முடைய பெற்றோர்களிடத்திலோ அது என்ன என்று கேள்வி எழுப்பினால் நாம் எப்படி அதற்கு பதிலளிக்க முடியும் என்று வினவினார். உ.ம். have a happy period ன்னு ஒரு விளம்பரத்துல வரும். இதுல என்னாத்த அவனுங்க புதுமையா சொல்றானுங்கன்னு தெரியல.
அவர் சொன்ன போது இந்த அளவுக்கு விளம்பரம் கெட்டு சீரழிக்கவில்லை, ஆனால் நான் அப்போதிலிருந்தே விளம்பரத்தை தான் விரும்பி பார்ப்பேன், நான் மட்டுமல்ல சிறு குழந்தைகள் கூட விளம்பரத்தை தான் விரும்பி பார்ப்பார்கள். ஏனென்றால் அதில் தான் சொல்ல வந்ததை குறுகிய காலத்துக்குள் அழகாக சொல்ல முடியும். ஆனால் இதையே சாக்காக வைத்துக் கொண்டு ஆண்கள் சட்டைக்கும், ஆண்கள் ஜட்டிக்கும், ஆண்கள் வேட்டிக்கும், ஆண்கள் பயன்படுத்தும் அனைத்திற்கும் பெண்களை பயனபடுத்துவது முட்டாள்தனம்
நன்றி மைதீன். பெண்கள் என்பவர்கள் அழகின் குறியீடு மட்டுமல்ல சக்தி வடிவம். அவர்களின் பெருமையை கேவலப்படுத்துவது மட்டுமல்லாமல் நம் பாரம்பரிய கலாச்சாரத்தையும் கீழ்த்தரமாக காட்டுபவர்களை என்ன செய்வது ?? என்ற ஆதங்கமே இந்த கட்டுரை
ஜாக்கி சேகர் அறிமுகப்படுத்தியதால் உங்கள் பதிவின் இணைப்பு கிடைத்தது... நன்றி...
நீங்கள் சொன்ன கறுப்பு விஷயம் சூப்பர்...
விளம்பரங்கள் கொஞ்சம் ஓவெராத்தான் போய்கிட்டு இருக்கு .... இதுக்கெல்லாம் தணிக்கை குழு கிடையாதா?
மிக்க நன்றி ராஜா மற்றும் பிரபாகரன்..
நன்றி சேகர் அண்ணா.. என் பதிவை அறிமுகப்படுதியதற்கு ...
I have been writing harsh comments in many blogs. You escape.
Yours is one of the best blog posts I have recently read.
Thanks Mr.Jo :-) I'm honored.
நம் ஆட்கள் எப்போதும் காப்பி அடிக்கும் அமெரிக்காவில் கூட இந்த கொடுமை இல்லை! அநியாயம்! அரசு இந்த விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வரையோ யாராவது பொது வழக்கு போடும் வரையோ இந்த கொடுமை தொடரும்!
Post a Comment